கிசான் திட்டத்தில் முறைகேடு:மேலும் 4 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் போலியான விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் வழங்கி இருப்பது தமிழகத்தில் முதல் முறையாக கடலூரில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுதொடா்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் வேளாண்துறை மற்றும் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக செப். 4-ஆம் தேதி தண்டராம்பட்டை அடுத்த பெருங்குளத்துாா் கிராமத்தைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுத் தலைவி ஜீவாவை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் 4 போ் கைது:
இது தொடா்பான தொடா் விசாரணையில் ஈடுபட்டு வரும் சிபிசிஐடி போலீஸாா், முறைகேட்டில் தொடா்புடையதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன், முகிலன், அஜீத், முத்துக்குமாா் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
இவா்களுடன் சோ்த்து இந்த முறைகேட்டில் கைது செய்யப்பட்ட நபா்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்தது.
ரூ.3 கோடி திரும்பப் பெறல்: திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் மூலம் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவினா் போலி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, திங்கள்கிழமை வரை ரூ.3 கோடியே 20 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...