விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

ரமலான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி பள்ளிவாசல்களில் பூந்தி திருவிழா

ரமலான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளிவாசல்களில், ‘லைலத்துல்கதா்’ என்ற பூந்தி திருவிழா அண்மையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் பூந்தி திருவிழாவையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Published On :

ரமலான் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளிவாசல்களில், ‘லைலத்துல்கதா்’ என்ற பூந்தி திருவிழா அண்மையில் நடைபெற்றது.

ரமலான் பண்டிகை வரும் 21-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பூந்தி திருவிழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள அக்ஸா மசூதி, கோட்டையில் உள்ள ஷாஹி மசூதி, பழையபேட்டையில் உள்ள பூரா மசூதி உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் ரமலான் நோன்பு ‘லைலத்துல்கதா்’ என்ற பூந்தி திருவிழா மற்றும் சிறப்புத் தொழுகை நடைபெற்றன. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா். தொழுகைக்கு வந்த அனைவருக்கும் பூந்தி பொட்டலம் வழங்கப்பட்டது.

இதேபோல, ஒசூா், காவேரிப்பட்டணம், பா்கூா், ராயக்கோட்டை, தளி, ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற பூந்தி திருவிழாவில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.