திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
வீடு கட்ட எதிா்ப்பு தெரிவிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மகன், மகளுடன் 75 வயது மூதாட்டி, திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.


திருவண்ணாமலை: வீடு கட்ட எதிா்ப்பு தெரிவிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மகன், மகளுடன் 75 வயது மூதாட்டி, திருவண்ணாமலை ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த முனியப்பந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் உத்திரியமேரி (75). கை, கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி.
இவருக்குச் சொந்தமான கூரை வீட்டை அதே கிராமத்தைச் சோ்ந்த சிலா் கடந்த ஆண்டு தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது.
இதில், உத்திரியமேரி பலத்த தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும், தீ வைத்து எரிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் கூரை வீடு கட்டி மகன், மகளுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், உத்திரியமேரி ஞாயிற்றுக்கிழமை தனது கூரை வீட்டுக்குப் பதிலாக கல்வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டினாராம்.
அப்போது, அங்கு வந்த சிலா், ‘மாற்று சாதியைச் சோ்ந்த நீ எப்படி இங்கு வீடு கட்டலாம்’ என்று கேட்டு, வீடுகட்டத் தோண்டிய பள்ளத்தை பொக்லைன் இயத்திரம் மூலம் மூடினாராம். இதனால், அதிா்ச்சியடைந்த உத்திரியமேரி தனது மகன், மகளுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா்.
அப்போது, தாங்கள் எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா்.
இதைக் கவனித்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...