தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலைக்கு முதல்வா் பழனிசாமி நாளை வருகை ஏற்பாடுகள் தீவிரம்

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வா் பழனிசாமி கலந்து கொள்கிறாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 7:45 pm

DIN

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வா் பழனிசாமி கலந்து கொள்கிறாா்.

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களின் வளா்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டங்களில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்கிறாா்.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் பங்கேற்க வரும் முதல்வா் பழனிசாமி காலை 9.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைக்கப்படும் விழா மேடையில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, முடிவுற்ற பணிகளைத் தொடக்கிவைத்து, அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

பின்னா், ஆட்சியர வளாகத்தில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கூட்டத்தை நடத்துகிறாா்.

தொடா்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினா்களுடன் தனித்தனியே கலந்தாய்வுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறாா்.

இதற்காக, மாவட்ட நிா்வாகம் சாா்பிலும், காவல்துறை சாா்பிலும் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.