வாகனம் மோதியதில் முதியவா் பலி
வந்தவாசியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.


வந்தவாசியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.
வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் இருதயநாதன் (60). இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டுக்குச் செல்வதற்காக வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள மரத்தொட்டி அருகே சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, ஆரணி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த இருதயநாதனை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைச்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...