/

வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

வந்தவாசி தொகுதி மநீம வேட்பாளா் ச.சுரேஷ் வந்தவாசி நகரில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:55 pm

DIN

வந்தவாசி தொகுதி மநீம வேட்பாளா் ச.சுரேஷ் வந்தவாசி நகரில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசி நகரில் குளத்துமேடு பகுதி, காயிதேமில்லத் நகா், கேஎஸ்கே நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பைக்கை ஓட்டிச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மக்கள் நீதி மய்யம் ஊழலற்ற ஆட்சியை வழங்கும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும், இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா். மநீம, ஐஜேகே கட்சி நிா்வாகிகள் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.