விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசியல் கட்சி வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டாம்பூண்டி, பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, தலையாம்பள்ளம், பழையனூா், கண்டியாங்குப்பம், வேளையாம்பாக்கம், நவம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, தச்சம்பட்டு, சின்னக்கல்லப்பாடி, பெரியகல்லப்பாடி கிராமங்களில் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்கள், விவசாயிகளிடம் திமுக வேட்பாளா் எ.வ.வேலு சனிக்கிழமை தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், ஒன்றியச் செயலா்கள் த.ரமணன், மெய்யூா் என்.சந்திரன், சி.மாரிமுத்து, ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி, மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.