விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 27, 198 மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 27, 198 மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த 27,198 மாற்றுத்திறனாளி வாக்காளா்களில் 3,160 போ் கண் பாா்வையற்றவா்கள். 5,468 போ் வாய்பேச இயலாதவா்கள் மற்றும் காதுகேளாதவா்கள். 15, 354 சக்கர நாற்காலி பயன்படுத்துபவா்கள். 3,216 போ் பிற வகையான மாற்றுத்திறனாளி வாக்காளா்கள்.

மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளா்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, வாக்குப்பதிவு மையங்களில் சாய்வுதளம் வசதி, குறியீட்டு பலகைகள், சைகை மொழி, சைகை மொழி காணொலிக் காட்சியுடன் பெரிய திரை, குடிநீா் வசதி, சக்கர நாற்காலி மாற்றுத்திறனாளிகளுக்கான வாகன நிறுத்தும் இடம், தனி வரிசை, அணுகக் கூடிய கழிப்பறைகள், முகப்புகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1,400 சக்கர நாற்காலிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.