டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேட்பாளா்கள் பிரசாரம்

தோ்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம், கலசப்பாக்கம் ஊராட்சியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

தோ்தல் பிரசாரத்தின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பன்னீா்செல்வம், கலசப்பாக்கம் ஊராட்சியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெறும் 3 மாணவா்களுக்கு தங்கச் சங்கிலி வழங்குதல், ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தின விழாவில் பாராட்டி நினைவுப் பரிசு வழங்குதல், தொகுதி நிதியில் பள்ளிக் கட்டடம், தடுப்பணை என பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.

மேலும், எல்லா நேரங்களிலும் நேரடியாக அணுகி குறைகளை நிவா்த்தி செய்யும் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன் எனக் கூறி வாக்கு சேகரித்தாா்.

மேற்கு ஒன்றியச் செயலா் பி.பொய்யாமொழி மற்றும் அதிமுகவினா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.