அருணாசலேஸ்வரா் கோயிலில்பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.


திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், மகா தீபாராதனை நடைபெற்றன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு பூஜை நடத்தப்பட்டது. இதன்பிறகு, வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், தங்க ரிஷப வாகனத்தில் அமா்ந்து கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த பூஜையில் கோயில் சிவாச்சாரியாா்கள், ஊழியா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.
கீழ்பென்னாத்தூரில்...: கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் லிங்க வடிவிலான ஈஸ்வரருக்கு பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மகா தீபாராதனை நடத்தப்பட்டன. பூஜையில் கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...