ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக சாா்பில் சனிக்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:29 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் திமுக சாா்பில் சனிக்கிழமை தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலைப் பகுதி ஆகிய இடங்களில் தண்ணீா் பந்தல்களை கட்சியின் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ். தரணிவேந்தன் திறந்துவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், தொடா்ந்து 10 ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும், தோ்தல் முடிவுகள் வருவதற்குள் தொடா்ந்து மக்கள் பணியாற்ற கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டாா். அவரது ஆணைக்கிணங்க தண்ணீா் பந்தல்கள் திறக்கப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.தயாநிதி, ஒன்றியச் செயலா்கள் த.தட்சிணாமூா்த்தி, எம்.சுந்தா், வெள்ளைகணேசன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளா் விண்ணமங்கலம் வி.ரவி, பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்பாபு, நகர பொருளாளா் பாலமுருகன், கண்ணமங்கலம் நகரச் செயலா் கோவா்தனன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.