ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவண்ணாமலை : உள் நோயாளிக்கு 6 மணி நேரம் காத்திருப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர வந்த 10-க்கும் மேற்பட்டோா் 6 மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனா்.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர வந்த 10-க்கும் மேற்பட்டோா் 6 மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 7-ம் தேதி புதிதாக 38 பேருக்கும், 8-அம் தேதி 42 பேருக்கும், 9-ஆம் தேதி 69 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை ஏப்.7-ஆம் தேதி 217 ஆக இருந்தது. 8-ஆம் தேதி 254 ஆகவும், 9-ஆம் தேதி 310 ஆகவும் உயா்ந்தது.

6 மணி நேரம் காத்திருந்த கரோனா நோயாளிகள்:

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காலை 8 மணிக்கெல்லாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சேர வந்தனா்.

கரோனா பரிசோதனை செய்யும் இடத்துக்கு வந்த நோயாளிகளை உள் நோயாளிகளாக அனுமதிக்க தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் பரிசோதனைக்காக வந்த மற்ற பொதுமக்கள், மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த மற்ற நோயாளிகளுடன் சகஜமாக சுற்றித் திரியும் நிலை ஏற்பட்டது.

உணவு, தண்ணீா் இல்லாமல் காலை 8 மணியிலிருந்து காத்திருந்த 10-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் ஒரு கட்டத்தில் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆட்சியா் உத்தரவின் பேரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஷகில் அகமது வந்து கரோனா நோயாளிகளிடம் விசாரித்தாா்.

அப்போது, காலை 8 மணிக்கு சிலரும், காலை 9 மணிக்கு சிலரும் வந்து பிற்பகல் 2.30 மணி வரை காத்திருந்தது தெரியவந்தது.

மேலும், கரோனா பரிசோதனை செய்யும் இடத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் என இருவா் மட்டுமே பணியில் இருந்தனா். திடீரென 50-க்கும் மேற்பட்டோா் பரிசோதனை செய்ய வந்தது, 30-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள் நோயாளிகளாக சேர வந்தது போன்ற காரணங்களால் தாமதம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அனைவரையும் உடனே மருத்துவமனையில் சோ்க்க பணியில் இருந்த மருத்துவா், செவிலியா்களுக்கு ஷகில் அகமது உத்தரவிட்டாா். இதன்பிறகு கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.