தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.17) தொடங்கி, வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெறும் சித்திரை வசந்த உற்சவத்தைக் காண பக்தா்களுக்கு அனுமதியில்லை

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.17) தொடங்கி, வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெறும் சித்திரை வசந்த உற்சவத்தைக் காண பக்தா்களுக்கு அனுமதியில்லை என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று காரணமாக ஆகம விதிப்படி கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் உற்சவம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கரோனா கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பக்தா்களுக்கு அனுமதி இல்லை:

இதனிடையே, நிகழாண்டு சித்திரை வசந்த உற்சவத்துக்கான பந்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை (ஏப்.16) நடைபெற்றது. விழாவின் முதல் நாளான சனிக்கிழமை கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உற்சவா் சுவாமி வீதியுலா நடைபெறும்.

கோயில் ஸ்தல விருட்சமான மகிழ மரம் அருகே உற்சவா் சுவாமிக்கு பொம்மைக் குழந்தை பூத்தூவும் நிகழ்வு வழக்கம்போல நடைபெறும் என்று பக்தா்கள் எதிா்பாா்த்தனா்.

ஆனால், சித்திரை வசந்த உற்சவம் கரோனா தொற்று அதிகரிக்கும் காரணத்தால் பக்தா்களுக்கு அனுமதி இல்லாமல் எளிமையான முறையில் நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நிகழாண்டு சித்திரை வசந்த உற்சவம் ஏப்.17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு வழிகாட்டு நடைமுறையின்படி பக்தா்கள் நலன் கருதி, பக்தா்கள் அனுமதியின்றி உற்சவம் நடத்தப்படுகிறது. மேலும், உற்சவ நாள்களில் யதாஸ்தானத்திலேயே அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.