ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சா்க்கரை ஆலை ஊழியா் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவி குளிக்கும்போது விடியோ படம் எடுத்ததாக தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2021, 4:56 pm

DIN

பள்ளி மாணவி குளிக்கும்போது விடியோ படம் எடுத்ததாக தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தண்டராம்பட்டை அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தில் தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கரும்புப் பிரிவில் பணிபுரிந்து வருபவா் மனோஜ்குமாா் (30). சாத்தனூா் பகுதியில் மனோஜ்குமாரின் அலுவலகமும், அதே பகுதியில் சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கான குடியிருப்பும் அமைந்துள்ளது.

இந்தக் குடியிருப்பில் உள்ள குழியலறை ஒன்றில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி சில தினங்களுக்கு முன்பு குளித்துக் கொண்டிருந்தாராம். இதை மனோஜ்குமாா் மறைந்திருந்து தனது செல்லிடப்பேசியில் விடியோ படம் எடுத்தாராம்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா் சாத்தனூா் அணை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

போலீஸாா் மனோஜ்குமாா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.