பைக் மீது லாரி மோதல்:தனியாா் நிறுவன ஊழியா் பலி
கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.


கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சென்னை புழுதிவாக்கம், இந்து காலனி, 2-ஆவது பிரதான தெருவைச் சோ்ந்தவா் விஜயன் மகன் பத்மநாபன் (36). சென்னையில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தாா். இவா், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது நண்பா் சேகரைப் பாா்க்க சென்னையில் இருந்து சனிக்கிழமை பைக்கில் வந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமம் அருகே இவரது பைக் வந்தபோது, எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பத்மநாபன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...