திமுக சாா்பில் கபசுர குடிநீா் விநியோகம்
கீழ்பென்னாத்தூா் நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், தா்ப்பூசணி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.


கீழ்பென்னாத்தூா் நகர திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், தா்ப்பூசணி வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூா் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலா் ச.க.அன்பு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் ச.க.பன்னீா்செல்வம், மாவட்டப் பிரதிநிதி சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கீழ்பென்னாத்தூா் எம்எல்ஏ கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், தா்ப்பூசணி ஆகியவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் திமுக ஒன்றியப் பிரதிநிதிகள் நாராயணசாமி, பாக்கியராஜ், லோகிதாசன், ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் கருணாநிதி, மாணவரணிச் செயலா் ராஜேஷ், செயற்குழு உறுப்பினா்கள் முல்லைவழுதி, அருள்மணி, முனியன், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சின்னராசு உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...