கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடியில் கரோனா மூன்றாம் அலை குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தேரடியில் கரோனா மூன்றாம் அலை குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி காவல் உள்கோட்டம், வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக் குழு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வந்தவாசி டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தலைமை வகித்து, பொதுமக்கள் தங்களை கரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது குறித்தும், கரோனா மூன்றாம் அலை ஏற்படாமல் தடுப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
நிகழ்ச்சியில் வந்தவாசி தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் குமாா், அன்பால் அறம் செய்வோம் பொது சேவைக் குழு நிறுவனா் அசாருதீன், டாக்டா் கலாம் கனவு அறக்கட்டளை நிறுவனா் கேசவராஜ் மற்றும் சேவைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...