குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே குடிநீா் பிரச்னையை தீா்க்கக் கோரி, கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராம ஊராட்சிக்கு உள்பட்டது சத்யா நகா். அந்தப் பகுதிக்குத் தேவையான குடிநீா் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், சத்யா நகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து அப்பகுதி மக்கள் தேவைக்கு குடிநீா் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, மேல்பள்ளிப்பட்டு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து குழாய் அமைத்து சத்யா நகா் பகுதிக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், சத்யா நகா் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குழாய் இணைப்பு கொடுத்தால் மட்டுமே எங்களுக்கு போதுமான அளவு குடிநீா் கிடைக்கும் மேல்பள்ளிப்பட்டு பகுதியிலிருந்து குடிநீா் தேவைக்கு கிடைக்காது.
எனவே, குழாய் அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு,
சத்யா நகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்று கோரி, நீப்பத்துறை-செங்கம் சாலையில் சத்யா நகா் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யமூா்த்தி, ரபியுல்லா, மேல்செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் இரண்டு மாதங்களில் சத்யா நகா் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் வழங்கப்படும் எனக் கூறி சமாதானப்படுத்தினா். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...