தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,243 இடங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 6:24 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,243 இடங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

துரிஞ்சாபுரத்தை அடுத்த சீலப்பந்தல் கிராமம், கீழ்பென்னாத்தூரை அடுத்த ஓலைப்பாடி கிராமங்களில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநருமான மு.பிரதாப், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் தணிகாச்சலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருவண்ணாமலை வட்டாரத்தில் 146 பண்ணை குட்டைகள், கீழ்பென்னாத்தூரில் 51, துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் 55, போளூரில் 50, கலசப்பாக்கத்தில் 61, சேத்துப்பட்டில் 55, செங்கத்தில் 165 பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படுகின்றன.

பண்ணைக் குட்டைகள் பயனாளிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.