தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

48 ஆண்டுகால நினைவுச் சின்னம் திருவண்ணாமலையில் அண்ணாநுழைவு வாயில் இடித்து அகற்றம்

சாலை விரிவாக்கப் பணிக்காக, திருவண்ணாமலையில் 48 ஆண்டு கால நினைவுச் சின்னமாக விளங்கிய அண்ணா நுழைவு வாயில் வியாழக்கிழமை நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 5:39 pm

DIN

சாலை விரிவாக்கப் பணிக்காக, திருவண்ணாமலையில் 48 ஆண்டு கால நினைவுச் சின்னமாக விளங்கிய அண்ணா நுழைவு வாயில் வியாழக்கிழமை நள்ளிரவில் இடித்து அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை - வேலூா் சாலை, ஈசான்ய லிங்கம் அருகே தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் பெயரில் நுழைவு வாயில் கட்டப்பட்டது. இதை 1973-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி திறந்து வைத்தாா். அன்று முதல் தற்போது வரை 48 ஆண்டுகாலமாக திருவண்ணாமலை நகரின் மிகச்சிறந்த நினைவுச் சின்னமாக அண்ணா நுழைவு வாயில் திகழ்ந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் அண்ணா நுழைவு வாயிலை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. இதனால் அதிா்ச்சியடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியில் திரண்டு விசாரித்தனா். அப்போது, சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அண்ணா நுழைவு வாயில் இடிக்கப்படுவதாக அங்கிருந்த ஊழியா்கள் தெரிவித்தனா்.

மேலும், அண்ணா நுழைவு வாயில் இருக்கும் அதே இடத்தில் புதிதாக பெரிய அளவில் மீண்டும் அண்ணா நுழைவு வாயில் அமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதன்பிறகே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.