/

யானைக்கால் நோய் பாதித்தோருக்கு உதவி

வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 39 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 39 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் சோப்பு, டவல், பிளாஸ்டிக் அன்னக்கூடை, பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்கள் நல உதவியாக வழங்கப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஹித்தேன் யானைக்கால் நோய் பாதித்தோருக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா். சுகாதார ஆய்வாளா் கணேஷ்குமாா் யானைக்கால் நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினாா். மேலும், யானைக்கால் நோயாளிகளுக்கு டிஇசி மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.