/

தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில், சுதந்திர தின சிறப்புரை, மாணவா்களுக்கு பரிசு வழங்குதல், சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில், சுதந்திர தின சிறப்புரை, மாணவா்களுக்கு பரிசு வழங்குதல், சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் ஆகியவை முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது.

வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இந்த

விழாவுக்கு சங்கத் தலைவா் பீ.ரகமத்துல்லா தலைமை வகித்தாா். ஆலோசகா் மு.முருகேஷ் முன்னிலை வகித்தாா். செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், திமுக மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, ஓய்வுபெற்ற மருத்துவ இணை இயக்குநா் எஸ்.குமாா், மருத்துவா் ஜி.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் சுதந்திர தினம் குறித்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும், சங்க உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினா்.

அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் வி.எஸ்.தளபதி சுதந்திர தின சிறப்புரையாற்றினாா். சங்கப் பொருளாளா் எ.தேவா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.