/

சப்த கன்னிமாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீகணபதி, ஸ்ரீசப்த கன்னிமாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:57 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீகணபதி, ஸ்ரீசப்த கன்னிமாா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை விக்னேஸ்வா் பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், அங்குராா்ப்பணம், முதல்கால யாகசாலை பூஜை, பிம்ப சுத்தி, பீடஸ்தாபனம், பிம்ப பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை நாடி சந்தானம், தத்வாா்ச்சனை, தத்வ ஹோமம், மகா பூா்ணாஹுதி, யாத்ராதானம், யாகசாலையிலிருந்து கும்ப புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன.

பின்னா், காலை 7-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிர வைசியா் குல தெய்வ பாத்யதை குடும்பத்தினா் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.