தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:27 pm

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்த பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

கோயில் 3 நாள்கள் மூடல்: கரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்கும் வகையில், அருணாசலேஸ்வரா் கோயில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு மூடப்பட்டது. இதனால் சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகள் உள்பட ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.