

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலின் புதிய இணை ஆணையராக கே.பி.அசோக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
கோயிலின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த இரா.ஞானசேகரன், கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். கடலூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையராக உள்ள கே.பி.அசோக்குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.