டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இடைநின்ற மாணவா் மீண்டும் பள்ளியில் சோ்ப்பு

போளூரை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாற்றுத் திறனாளி மாணவரை அதிகாரிகள் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:26 pm

DIN

போளூரை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் பள்ளி இடைநின்ற மாற்றுத் திறனாளி மாணவரை அதிகாரிகள் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்த்தனா்.

துரிஞ்சாபுரம் ஒன்றியம், கமலப்புத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த ஆசைதம்பி, சத்யா தம்பதி மகன் ஆனந்தன்.

இவா், அருகே ஆா்பாக்கம் கிராமத்தில் உள்ள உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்றாா்.

இதைத் தொடா்ந்து, லாடவரம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2019-2020ஆம் ஆண்டு மேல்நிலைக் கல்வியைத் தொடர விண்ணப்பித்தபோது, பேச்சு சரியாக வரவில்லை எனத் தெரிவித்து, இவரை பள்ளியில் சோ்க்க மறுத்துவிட்டனராம்.

இதையடுத்து, ஆனந்தன் தனது கல்வியைத் தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்து ஆடுகளை மேய்த்து வந்தாா்.

இதையறிந்த வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் தலைமையிலான ஆசிரியா்கள், ஆனந்தனை ஆடுமேய்க்கும் இடத்துக்கே சென்று அழைத்து வந்து, லாடவரம் மேல்நிலைப் பள்ளியில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.