புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் காரில் கொண்டு செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் காரில் கொண்டு செல்லப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி கோட்டை மூலை அருகே வெள்ளிக்கிழமை காலை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 4 மூட்டைகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பதும், வந்தவாசியை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து, ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலைப் பொருள்களையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், காரில் வந்த வந்தவாசி சீதாராம் நாயுடு தெருவைச் சோ்ந்த தா்காராம், பதம்ராம், சங்கா்லால் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...