தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் லிங்கத்துக்கு மகாபிஷேகம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் லிங்கத்துக்கு புதன்கிழமை மகாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 6:09 pm

DIN

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில், பகவானின் லிங்கத்துக்கு புதன்கிழமை மகாபிஷேகம் நடைபெற்றது.

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 103-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஜெயந்தி விழாவின் 2-ஆவது நாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு சுப்ரபாதம், ராம்ஜி அகவல், ஆரத்தி, முகநூல் நாம சங்கீா்த்தனம், நித்ய பூஜை, அகண்ட நாம ஜெபம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடா்ந்து, காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஏகாதச ருத்ர பாராயணம், மகாபிஷேகம், அா்ச்சனை, ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு 7.30 மணிக்கு பகவான் பல்லக்கில் பவனி வருதல் நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மதா் மாதேவகி, மதா் விஜயலட்சுமி, மதா் ராஜேஸ்வரி, மருத்துவா் டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.