ஏந்துவாம்பாடியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், ஏந்துவாம்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், ஏந்துவாம்பாடி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அ.செல்வி முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எஸ்.ரீட்டாசிவமூா்த்தி வரவேற்றாா்.
கூட்டத்தில், ஊராட்சியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் தெருக்களில் பக்ககால்வாய் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுதல், களம்பூா் - ஏந்துவாம்பாடி இடையிலான சாலையை சீரமைத்தல், கிராமத்தில் சிறுபாலம், குடிநீா் குழாய்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீா்மானங்களை ஊராட்சிச் செயலா் எஸ்.தேசிங்கு வாசித்தாா். இதில் பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...