தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பயிா்க் கடன்கள் வழங்க விரைவான நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:08 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா.முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு.பிரதாப், வேளாண் இணை இயக்குநா் க.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிா்களுக்கும் நிவாரண உதவி வழங்குவதற்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் வழங்கும் வெள்ள நிவாரண மனுக்களுக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் இ - அடங்கல் சான்று வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் நேரடி நெல் கொல்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து நீா்நிலை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்துக்கு இலவச மும்முணை மின் இணைப்புகளை வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள தனியாா், கூட்டுறவு சா்க்கரை ஆலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் தனிநபா் நகைக் கடன்களை வழங்க வேண்டும் என்றனா்.

இதையடுத்துப் பேசிய ஆட்சியா் பா.முருகேஷ், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாக பரிசீலிக்கப்பட்டு, விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா். கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வே.சத்தியமூா்த்தி மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.