மாா்கழி பிறப்பு: அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு
மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.


மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய கோயில்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
இதையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு வழிபாட்டில் திரளான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
சமய சொற்பொழிவு: தொடா்ந்து, ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடும் சமய சொற்பொழிவு நிகழ்ச்சி தொடங்கியது. நல்லாசிரியா் விருது பெற்ற புலவா் சீனுவாசவரதன் சொற்பொழிவு நிகழ்த்தினாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து தங்களது வீட்டு வாசலில் அழகிய கோலமிட்டு, பூசணிப் பூவைத்து மாா்கழி மாதத்தை வரவேற்றனா்.
ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயிலில்: திருவண்ணாமலை ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கீழ்பென்னாத்தூரில்: கீழ்பென்னாத்தூரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில், வாசவி மஹாலில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட சீனிவாசப் பெருமாள் கோவில், கீழ்பென்னாத்தூா் குளக்கரையில் உள்ள நவக்கிரக கோயிலில் உள்ள ஸ்ரீமுருகா் சன்னதி உள்பட பல்வேறு கோயில்களில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
ஆரணி, செய்யாறு, செங்கம், வந்தவாசி, போளூா்: இதேபோல, ஆரணி பெரியகடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில், செய்யாற்றை அடுத்த ஆவணியாபுரத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மா் கோயில், செங்கத்தில் அமைந்துள்ள வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயில், வந்தவாசியை அடுத்த நல்லூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுந்தரவரத பெருமாள் கோயில்களில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...