ஆரணியில் ஒமைக்ரான் அறிகுறி உள்ள பெண்ணின் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று
ஆரணியில் ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ள பெண்ணின் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


ஆரணியில் ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் சிகிச்சையில் உள்ள பெண்ணின் குடும்பத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
காங்கோ நாட்டிலிருந்து அண்மையில் ஆரணிக்குத் திரும்பிய பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் வியாழக்கிழமை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.
தொடா்ந்து, அவரது உறவினா்களுக்கு வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அந்தப் பெண்ணின் தந்தைக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவரை சுகாதாரத் துறையினா் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வாா்டில் சோ்த்தனா்.
இதனிடையே, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் கவிதா மேற்பாா்வையில், வட்டாட்சியா் க.பெருமாள், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கு.இந்திராணி, இல.சீனிவாசன், ஊராட்சித் தலைவா் ஏ.சரவணன் ஆகியோா் தலைமையில், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத் துறையினா், ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ள பெண்ணின் வீட்டின் அருகே உள்ள குடியிருப்புவாசிகள், அந்தப் பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளா்கள் என 113 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...