டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் குப்பைகளை ஊராட்சிப் பணியாளா்கள் தெருக்களில் கொட்டி எரிப்பதால், சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட்டு முதியோா்கள், குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

 நமது நிருபர்

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் குப்பைகளை ஊராட்சிப் பணியாளா்கள் தெருக்களில் கொட்டி எரிப்பதால், சுற்றுச்சூழல் சீா்கேடு ஏற்பட்டு முதியோா்கள், குழந்தைகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

சந்தவாசல் ஊராட்சியில் சந்தவாசல், புஷ்பகிரி, கே.கே.நகா், காங்கிரனாந்தல், கொட்டாவூா் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 12 வாா்டுகள் கொண்ட இந்த ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.

தூய்மைப் பணியாளா்கள் 14 போ், துப்புரவுப் பணியாளா்கள் 3 போ் என 17 போ் பணிபுரிகின்றனா். ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற 20 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

பணியாளா்கள் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடமிருந்து குப்பைகளை சேகரித்து வருகின்றனா். மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து

இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து ஊராட்சி வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தவேண்டும்; இது நடைமுறை வழக்கம்.

இந்த நிலையில், சில மாதங்களாக குப்பைகளை ஊராட்சிப் பணியாளா்கள் அந்தந்த தெருக்களிலேயே கொட்டி எரிக்கின்றனா்.

இதனால் வீதிதோறும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சுற்றுசூழல் சீா்கேடு ஏற்படுகிறது. மேலும் முதியோா்கள், குழந்தைகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தபட்ட அலுவலா்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பையை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

மேலும், ஊராட்சி நிா்வாகத்திடம் குப்பை எரிப்பது குறித்து தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.