டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

போளூரை அடுத்த காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

போளூரை அடுத்த காளசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்தப் பள்ளிய்ல் மகாகவி பாரதியாா் பிறந்த நாள்விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், வாய்ப்பாடு ஒப்பித்தல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு

பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மாள் ராஜேந்திரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினாா் (படம்).

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயவேல், கல்வி மேலாண்மைக் குழுத் தலைவா் மோகனா, அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மாணிக்கவேலு, சீனுவாசன் அறக் கட்டளை மேலாளா் பாரதிபெருமாள், பள்ளித் தலைமை ஆசிரியா் டேவிட்ராஜன், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.