வாஜ்பாய் பிறந்த நாள்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி புறவழிச் சாலையில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றியத் தலைவா் கே.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
மாவட்ட பிறமொழித் தலைவா் என்.ரமேஷ் முன்னிலை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெயவேல் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் என்.வெங்கடேசன் கலந்து கொண்டு வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
செங்கம்
செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற வாஜ்பாய் பிறந்த நாள் விழாவில்,
அவரது படத்துக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலா் சேகா் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். மாவட்டச் செயலா்கள் ஜெயராமன், ராஜேந்திரன், மேற்கு ஒன்றியத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...