அரசுப் பள்ளிக்கு ரூ.7 லட்சத்தில் நுழைவு வாயில்
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் அரசுப் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட நுழைவு வாயில், சுற்றுச் சுவரினை தூசி கே.மோகன் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.


செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் அரசுப் பள்ளியில் ரூ.7 லட்சத்தில் அமைக்கப்பட்ட நுழைவு வாயில், சுற்றுச் சுவரினை தூசி கே.மோகன் எம்எல்ஏ திறந்துவைத்தாா்.
வெம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்தில் நுழைவு வாயில் மற்றும் சுற்றுச் சுவா் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமையாசிரியா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஸ்ரீதரன் வரவேற்றாா். வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா்டி. ராஜூ தலைமை வகித்தாா்
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பங்கேற்று நுழைவு வாயில் மற்றும் சுற்றுச் சுவரை மாணவா்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துப் பேசினாா் (படம்).
நிகழ்ச்சியில், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கே.குமரேசன், அதிமுக ஒன்றியச் செயலா் பி.கே.நாகப்பன், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் எம்.மகேந்திரன், சி.துரை, டி.பி.துரை, பாஸ்கா் ரெட்டியாா், மாவட்ட கூட்டுறவுத் தலைவா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...