தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் பெண் விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் பெண் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்ட விவசாய நிலங்களில் உயா் மின் கோபுரங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் பெண் விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

உயா் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.