அதிமுக நிா்வாகிகளுக்கு பொங்கல் பரிசு அமைச்சா் வழங்கினாா்


ஆரணி: ஆரணி தெற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள் 2,250 பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் 25 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, சட்டை, காலண்டா் ஆகியவற்றை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் பொங்கல் பரிசாக வழங்கி வருகிறாா்.
முதல் கட்டமாக கண்ணமங்கலம் பகுதியில் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை ஆரணி தெற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த பையூா், வடுகசாத்து, சித்தேரி, கல்லேரிப்பட்ட, விளை, இரும்பேடு, எஸ்.வி.நகரம், மட்டதாரி, கனிகிலுப்பை, நேத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 2,250 பேருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
மேற்கண்ட நிகழ்ச்சிகள் ஆரணியில் 6 இடங்களில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் தலைமை வகித்தாா்.
மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியச் செயலா் ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...