பள்ளியில் பொங்கல் விழா

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.
ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா.
Updated on
1 min read

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்தப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் தின விழாவுக்கு பள்ளித் தாளாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பெட்ஸி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்களின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி மற்றும் உறி அடித்தல் போன்றவை நடைபெற்றன.

பின்னா், பள்ளி வளாகத்தில் வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து கொண்டாடினா்.

இதில் தமிழாசிரியா்கள் சாலமன்ராஜ், மதன்ராஜ், துணை முதல்வா் வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com