அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

வளா்ச்சிப் பணிகளை உரிய காலத்தில்முடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தெள்ளாா் ஊராட்சி ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகளை உரிய காலத்தில் முடிக்காவிட்டால், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சிச் செயலா்கள் மீது கடும் நடவடிக்கை

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:33 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தெள்ளாா் ஊராட்சி ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகளை உரிய காலத்தில் முடிக்காவிட்டால், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சிச் செயலா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கூடுதல் ஆட்சியரும், மாவட்ட திட்ட இயக்குநருமான மு.பிரதாப் எச்சரித்தாா்.

வந்தவாசி, தெள்ளாா் ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊராட்சிச் செயலா்கள் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற அவா் மேலும் பேசியதாவது:

பிரதமா் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு திட்டம், வீடுதோறும் கழிப்பறைத் திட்டம், ஜல்சக்தி அபியான் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும். சில ஊராட்சிகளில் 2016 - 17ஆம் ஆண்டைய திட்டப் பணிகளே முடிக்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

வருகிற 15-ஆம் தேதிக்குள் அனைத்து திட்டப் பணிகளையும் தொடங்கியிருக்க வேண்டும். தொடங்காத பணிகளுக்கு ஆடி மாதத்தை காரணம் காட்டினால், ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேலும், 2020 - 21ஆம் ஆண்டு பணிகளைத் தவிா்த்து மற்ற அனைத்துப் பணிகளும் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட ஊராட்சிச் செயலா்கள், பொறியாளா் பிரிவினா் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய காலத்தில் பணிகளை தொடங்காதவா்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அவா்களின் பெயா்களை கருப்புப் பட்டியலில் சோ்க்க வேண்டும்.

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து கிராம மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டங்களில் ஒன்றியக்குழுத் தலைவா்கள் இ.கமலாட்சி இளங்கோவன், எ.ஜெயமணி ஆறுமுகம், உதவிச் செயற்பொறியாளா் சபாநாயகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என்.ராஜன்பாபு, ஆா்.குப்புசாமி, ஏ.பி.வெங்கடேசன், சு.ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதனிடையே, ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டு வரும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகக் கட்டடப் பணிகள், வந்தவாசி ஒன்றியத்துக்குள்பட்ட கடைசிகுளம், கீழ்க்கொடுங்காலூா், உளுந்தை, தெள்ளாா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராசமுத்திரம், மீசநல்லூா், தென்வணக்கம்பாடி ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.