தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 2 பயணிகள் நிழல்குடைகள் திறப்பு

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 2 இடங்களில் ரூ.6.20 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 2 இடங்களில் ரூ.6.20 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடைகளை தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து நாடழகானந்தல் ஊராட்சியில் ரூ.3.10 லட்சத்திலும், பெரியஓலைப்பாடி ஊராட்சியில் ரூ.3.10 லட்சத்திலும் என மொத்தம் ரூ.6.20 லட்சத்தில் 2 நிழல்குடைகள் கட்டப்பட்டன. இவ்விரு நிழல்குடைகளின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விரு விழாக்களுக்கும் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆ.சம்பத், பி.பி.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம் வரவேற்றாா். தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவரும், கீழ்பென்னாத்தூா் தொகுதி எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 2 பயணிகள் நிழல்குடைகளையும் பயணிகளின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, மரக்கன்றுகளையும் கு.பிச்சாண்டி நட்டு வைத்தாா். விழாவில், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.