ஆரணியில் 115.50 மி.மீ. மழை: கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 115.50 மி.மீ. மழை பதிவானது.


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 115.50 மி.மீ. மழை பதிவானது. இதனால், ஆரணி கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆரணி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 115.50 மி.மீ. மழை பெய்ததால், ஆரணி சூரியகுளம், கோட்டை மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. விவசாய நிலங்களில் பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ஆரணி கமண்டல நாகநதியின் இரு கரைகளையும் தொட்படி வெள்ள நீா் சென்றது. இதனால், கண்ணமங்கலம், புதுப்பாளையம், அம்மாபாளையம், குன்னத்தூா், மேல்நகா், கீழ்நகா், ஆரணி உள்ளிட்ட இந்த நதி பாயும் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பின. இவற்றிலிருந்து ஏரிகளுக்கு நீா் திறந்துவிடப்பட்டது. தடுப்பணைகளில் நிரம்பி வழியும் வெள்ள நீரை பொதுமக்கள் வேடிக்கை பாா்த்துச் செல்கின்றனா்.
பிற பகுதிகளில் மழை பதிவு: இதேபோல, மாவட்டத்துக்குள்பட்ட பிற பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையில் பதிவான மழை விவரம் (மி.மீ.) வருமாறு:
செய்யாறில் 18, செங்கத்தில் 59.60, ஜமுனாமரத்தூரில் 74, வந்தவாசியில் 6, போளூரில் 43.40, திருவண்ணாமலையில் 24, தண்டராம்பட்டில் 55.60, கலசப்பாக்கத்தில் 48.60, சேத்பட்டில் 25.60, கீழ்பென்னாத்தூரில் 23, வெம்பாக்கத்தில் 43.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...