தொழிலாளி மா்ம மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மலைக்குன்றில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மலைக்குன்றில் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசியை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை(46). கூலித் தொழிலாளி. இவா் இதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு பணம் கடனாகக் கொடுத்திருந்தாராம். கடந்த வாரம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, இவருக்கும், கடன் வாங்கியவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதனால் அச்சமடைந்த அண்ணாதுரை, தன்னை ஏதாவது செய்து விடுவாா்களோ என்ற அச்சத்தில் அந்தக் கிராமத்தில் உள்ள மலைக்குன்றில் மறைந்திருந்தாராம். அவருக்குத் தேவையான உணவை அவரது மகன் பிரகாஷ் (16) எடுத்துச் சென்று கொடுத்து வந்தாராம்.
வழக்கம்போல, பிரகாஷ் வெள்ளிக்கிழமை உணவு எடுத்துச் சென்றபோது, அண்ணாதுரை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாராம். தகவலறிந்த தேசூா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று அண்ணாதுரையின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...