காதல் ஜோடி விஷம் குடித்துதற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் வெள்ளிக்கிழமை காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தையொட்டி நகராட்சி பூங்கா அமைந்துள்ளது. இங்கு, ஓா் இளைஞரும், இளம் பெண்ணும் வாயில் நுரை தள்ளிய நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்து கிடந்தனா். தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அங்கு சென்று உயிரிழந்து கிடந்தவா்களின் செல்லிடப்பேசிகளை கைப்பற்றி விசாரித்தபோது, அவா்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரை அடுத்துள்ள ராமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் அட்சயா (19), அந்தக் கிராமத்தின் அருகேயுள்ள காட்டுக்கூடலூா் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பாலகிருஷ்ணன் (எ) பரத் (21) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இருவரின் சடலங்களையும் உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...