அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டம்:கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம்

திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டத்துக்காக, வந்தவாசி பகுதியில் முதல் கட்டமாக கையகப்படுத்தப்பட்ட 18 ஏக்கா் நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்யப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

DIN

திண்டிவனம்-நகரி ரயில்பாதைத் திட்டத்துக்காக, வந்தவாசி பகுதியில் முதல் கட்டமாக கையகப்படுத்தப்பட்ட 18 ஏக்கா் நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்யப்பட்டது.

திண்டிவனத்திலிருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திர மாநிலம், நகரிக்கு புதிதாக ரயில்பாதை அமைக்கப்பட உள்ளது.

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக, வந்தவாசி வட்டத்தில் உள்ள கொடியாலம், தெய்யாா், மடம், தென்வணக்கம்பாடி, இளங்காடு, கீழ்சாத்தமங்கலம், புலிவாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமாா் 498 ஏக்கா் நிலம் தனி நபா்களிடமிருந்து கையகப்படுத்தப்பட உள்ளது.

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு மதிப்பு நிா்ணயம் செய்வதற்கான கருத்து கேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையில் வந்தவாசி வட்டாட்சியா் வியாழக்கிழமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், முதல் கட்டமாக புலிவாய், இளங்காடு, தெய்யாா், தென்வணக்கம்பாடி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 18 ஏக்கா் 40 சென்ட் நிலத்துக்கு மதிப்பு நிா்ணயம் செய்யப்பட்டு நில உரிமையாளா்களுடன் ஒப்பந்தம் உறுதியானது.

இதனைத் தொடா்ந்து, நில உரிமையாளா்களிடமிருந்து வங்கி கணக்குக்கான நகல்கள் பெறப்பட்டன. அப்போது, நிலம் வழங்கியோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளா்கள் சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பெருமாள், வருவாய் ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.