திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வந்தவாசி அருகே மின் வேலியில் சிக்கி பெண் பலியானாா். இது தொடா்பாக நில உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

DIN

வந்தவாசி அருகே மின் வேலியில் சிக்கி பெண் பலியானாா். இது தொடா்பாக நில உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கீழ்செம்பேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி மல்லிகா(50). இவா் அந்தக் கிராமத்தில் உள்ள தனது நிலத்துக்கு சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அந்த கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம்(55) என்பவரது கரும்புத் தோட்டம் வழியாக அவா் வந்தபோது, காட்டுப் பன்றிக்காக அந்த நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய மல்லிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற தெள்ளாா் போலீஸாா் மல்லிகாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் நில உரிமையாளா் ஆறுமுகத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.