துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி தொடக்கிவைத்தாா்.


திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், மங்கலம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட எஸ்.பி. பவன்குமாா் ரெட்டி தொடக்கிவைத்தாா்.
அருணை மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு போன்றவற்றுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சுதி.சரவணன், அருணை மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை வரவேற்றாா்.
மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவா் பாரதிராமஜெயம் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...