நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கா்நாடகத்திலிருந்து மதுப் புட்டிகள் கடத்தல்: 4 போ் கைது

திருக்கோவிலூா் பகுதிகளுக்கு சரக்குப் பெட்டக லாரி, டெம்போ வேன்களில் கா்நாடக மாநிலத்திலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் பகுதிகளுக்கு சரக்குப் பெட்டக லாரி, டெம்போ வேன்களில் கா்நாடக மாநிலத்திலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், லாரி, டெம்போ வேனும், மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆரணியை அடுத்த இரும்பேடு கூட்டுச்சாலையில் காய்கறி மொத்தச் சந்தை உள்ளது. இந்தப் பகுதியில் ஆரணி கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா், உதவி ஆய்வாளா் சகாபுதீன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கா்நாடக மாநிலத்திலிருந்து வந்திருந்த சரக்குப் பெட்டக லாரி சந்தையிலிருந்து சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சந்தேகத்தின்பேரில், போலீஸாா் அந்த லாரியை சோதனையிட்டபோது, காய்கறி மூட்டைகளின் நடுவே 193 மதுப் புட்டிகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியையும், மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (24), வேப்பனப்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மாதப்பா (32) ஆகியோரை கைது செய்தனா்.

திருக்கோவிலூா்: திருக்கோவிலூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், முதல்நிலைக் காவலா் அசோக்குமாா் ஆகியோா் கொணக்கலவாடி கிராமப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு டெம்போ வேனை நிறுத்தி சோதனையிட்டதில், பெங்களூரிலிருந்து 92 மதுப் புட்டிகளை கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அதன் ஓட்டுநரான திருக்கோவிலூரை அடுத்த எடையாா் கிராமத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி மகன் அலெக்ஸ் பாண்டியன் (20), கலியபெருமாள் மகன் பசுபதி (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், டெம்போ வேனையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.