பைக்கில் மது கடத்திய மின் ஊழியா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக்கில் மது கடத்திய மின் வாரிய ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக்கில் மது கடத்திய மின் வாரிய ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸாா், மங்கலம் மாமண்டூா் கூட்டுச்சாலையில் வியாழக்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பாதூா் சாலையிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் நோக்கி பைக்கில் சென்றவரை நிறுத்தி விசாரித்ததில், உத்திரமேரூரை அடுத்த மேல்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் (44) என்பதும், காஞ்சிபுரத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வருவதும், புதுவையிலிருந்து பைக்கில் மதுப் புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், வேலாயுதத்தை கைது செய்தனா். அவரிடமிருந்து 27 மதுப் புட்டிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...