/

பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, வந்தவாசி, சேத்துப்பட்டில் இடதுசாரிக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:25 am

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, வந்தவாசி, சேத்துப்பட்டில் இடதுசாரிக் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி தேரடியில் உள்ள அஞ்சல் அலுவலகம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சைக்கிளை மோட்டாா் பைக் போல ஜோடித்து நிறுத்தி வைத்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரச் செயலா் ஜா.வே.சிவராமன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.பாரி, சிஐடியு தொழிற்சங்க மாவட்ட பொருளாளா் சு.முரளி, வட்டாரக் குழு உறுப்பினா்கள் என்.ராதாகிருஷ்ணன், சு.சிவக்குமாா், எஸ்.முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா்.

சேத்துப்பட்டில்...

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி மணிவண்ணன் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டச் செயலா் சேகா் பேசினாா். நிா்வாகிகள் தங்கமணி ஆனந்தன் லெனின் பாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.